Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா!..

Written By Mahendran
Updated: திங்கள், 16 மார்ச் 2026 (07:54 IST)
திருவள்ளூரில் இருக்கும் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ கீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடைபெறவிருக்கிறது. இந்த வருடத்தின் பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த 13ம் தேதி துவங்கியது. 14 ஆம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.. அதன்பின் உற்சவர் திரிபுர சுந்தரி சமேத கீர்த்தீஸ்வரர் திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்கள். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்கள்..

வருகிற 24-ம் தேதி வரை 12 நாட்கள் இந்த விழா நடைபெறவிருக்கிறது.. தினமும் காலை மாலை இரண்டு வேளையிலும் பல வாகனங்களில் உற்சவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கவிருக்கிறார். மேலும் சிறப்பு உற்சவங்களும், வேதபாராயணமும்  நடக்கவிருக்கிறது.

குறிப்பாக வருகிற 18-ஆம் தேதி மாலை ரிஷப வாகன வீதி உலா மற்றும் பஞ்சமூர்த்தி தரிசனம் நடைபெறவிருக்கிறது.. மேலும், 20ம் தேதி காலை ரத உற்சவமும், 21ம் தேதி இரவு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ தீர்த்திஸ்வரர் திருக்கல்யாணமும், 22ம் தேதி புஷ்ப பல்லக்கு உற்சவமும், 23ம் தேதி தீர்த்தவாரியும் நடைபெறவிருக்கிறது, இறுதியாக 24ம் தேதி மகா அபிஷேகத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது..

அடுத்த கட்டுரையில்
Show comments