1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
  4. selam maha mariyamman kovil temple kumbabhishekam

சேலம் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!.. குவிந்த பக்தர்கள்!...

kovil
சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்திற்கு அடுத்துள்ள ஆண்டிபட்டி பகுதியில் பக்தர்களால் தரிசிக்கப்படும் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது.. இந்த கோயிலில் புணரைப்பு பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி புணரப்பு பணிகள் சில மாதங்களுக்கு முன்பு துவங்கியது.

அதன்பின் அந்த பணிகள் முழுவதுமாக முடிந்து சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேக விழாவை நடத்த கோயில் வளாகத்தில் கால்கோல் விழா நடந்தது. மேலும் கணபதி ஹோமம், தீர்க்க கூட ஊர்வலம், முளைபாரி சமர்ப்பணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடந்தது.. சில பூஜைகளும் செய்யப்பட்டது..

குறிப்பாக, யாகசாலை பூஜைகள் நேற்று காலை முடிவடைந்தவுடன் வேத மந்திரங்கள் முழங்க கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது..  ரவி கண்ணா பட்டாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் விநாயகர் மற்றும் மகாமாரியம்மன் கருவறை கோபுர கலசங்களுக்கு புனித நீரினை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

பின்னர் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டாரத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மகா மாரியம்மன் சாமி அருளை பெற்றார்கள்..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி”.. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பாராட்டு! ..