திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Modified: சனி, 6 மே 2023 (21:31 IST)

திருநள்ளாறு சனீஸ்வர் கோவில் பிரமோற்சவ விழா

Thirunallaru saneeshwarar temple
காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் சனிஸ்வர் கோவில் உள்ளது. இக்கோவில் சனிக்கிழமைதோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வர்.

இந்த நிலையில், இந்த ஆண்டு  சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. வழக்கமாக பிரம்மோற்சவ விழா 18 நாட்கள் நடைபெறும் நிலையி, விழாவில் தொடக்க நாள் நிகழ்ச்சியாக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி கடந்த மாதம் ஏப்ரல் 24 ஆம் தேதி நடைபெற்றது.

நேற்று காலை  தேர்களுக்கு தேர்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலெக்டர், அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரமோற்சவ விழா வரும் 16 ஆம் தேதியும், தியாகராஜர் உன்மத்த நடனம் 27 ஆம் தேதியும், தேரோட்டம் 30 ஆம் தேதியும், சனீஸ்வர பகவான் தங்க வாகனத்தில் திருவீதியுலா நிகழ்ச்சி வரும் 31 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மேலும், தெப்போற்சவ விழா வரும் ஜூன் 1 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.