1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 5 மே 2023 (22:40 IST)

திருக்காட்டுப்பள்ளி பூண்டி மாதா ஆலாயத்தில் ஆண்டு விழா நாளை தொடக்கம்

madha temple
திருக்காட்டுப்பள்ளி  பூண்டி மாதா ஆலாயத்தில் ஆண்டு விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது.

திருக்காட்டுப்பள்ளி அருகே காவிரி கொள்ளிடம் ஆற்றிற்கு இடையே அமைந்துள்ளது பூண்டி மாதா பேராலயம். பிரசித்தி பெற்ற இந்தப் பேராலயத்தின் ஆண்டு விழா  நாளை முதல் தொடங்கி 15 ஆம் தேதிவரை நடக்கவுள்ளது.

இதையொட்டி நாளை தொடக்க நிகழ்வாக கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கவுள்ளது. மே 8 ஆம் தேதி புதுமை இரவு வழிபாடு  நிகழ்ச்சியும்,  மே 14 ஆம் தேதி பூண்டி பேராலயத்தின் முன்னாள் பேராயர் லூர்து சேவியர் ராயப்பர் அடிகளாரின் திருப்பலி நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மே 15 ஆம் தேதி திருவிழா திருப்பலியை ஆயர் அந்தோணிசாமி நிறைவேற்றுவார் என்றும், மாலையில், கொடி இறக்கத்துடன் பூண்டி திருத்துதல் பேராலயத்தின் ஆண்டு திருவிழா நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.