1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 மே 2023 (18:31 IST)

திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா: தேதி அறிவிப்பு..!

Tiruchendhur
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் ஜூன் இரண்டாம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஜூன் ஒன்றாம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும் என்றும் அதன் பின் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஜூன் இரண்டாம் தேதி வைகாசி விசாகத் திருநாளில் அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விசுவரூப தீபாரதனை தொடங்கி சாயரட்சை தீபாரதனை வரை மாலை 4 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் கூடுதலாக கவனிக்கப்பட்டுள்ளன என அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran