புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 26 மே 2023 (18:43 IST)

சிவபெருமானுக்கு ரிஷப விரதம் இருந்தால் கோடி நன்மைகள்..!

சிவபெருமானுக்கு ரிஷப விரதம் இருந்தால் கோடி நன்மைகள் கிடைக்கும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
சிவபெருமானின் வாகனமாக இருக்கும் ரிஷபத்திற்கு விரதம் இருக்க வேண்டும் என்றும் சிவனுக்கு இருக்கும் இந்த விரதம் தான் மிகவும் பலன் மிக்க விரதம் என்றும் கூறப்படுகிறது. 
 
வைகாசி மாதத்தில் மாத சிவராத்திரி, பிரதோஷம் ஆகிய தினங்களில் இந்த ரிஷப விரதத்தை இருந்தால் பல பயன்கள் உண்டு என்று கூறப்படுகிறது. விரத நாளில் அதிகாலையில் எழுந்து சிவபெருமானை வழங்க வேண்டும் என்றும் உணவு ஏதும் உண்ணாமல் வெள்ளியால் செய்யப்பட்ட ரிஷப விக்ரத்திற்கு பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது. 
 
மேலும் சிவனுக்கு உகந்த அரிசி கொண்டு செய்யப்பட்ட அன்னம், பாயாசம் ஆகியவை வைத்து, சிவ மந்திரங்களை துதித்து விரதம் இருந்தால் கோடி நன்மைகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழங்களை மட்டும் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று புள்ளையும்
 
Edited by Mahendran