வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 23 மே 2023 (19:20 IST)

தீராத நோய்களை தீர்க்கும் திருவான்மியூர் திருக்கோவில்..!

சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவிலில் சென்று வழிபட்டால் தீராத நோய்கள் தீரும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
சென்னை புதுவை இடையே கிழக்கு கடற்கரையில் இருக்கும் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் மிகவும் புகழ்பெற்றது என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அகத்திய முனிவர் இந்த கோவிலில் தவம் இருந்தார் என்பது வரலாறு. அதேபோல் வசிஷ்ட முனிவர் சிவபூஜைக்காக இங்கு வந்திருந்தார் என்றும் கூறப்படுகிறது. 
இந்த கோவிலுக்கு வந்து மருந்தீஸ்வரரை சுவாமி தரிசனம் செய்தால் எந்தவிதமான தீராத நோயும் உடனே தீர்ந்து விடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. 
 
இந்த ஆலயத்தில் தரும் விபூதி பிரசாதம் சக்தி வாய்ந்தது என்றும் அந்த விபூதி பிரசாரத்தை வாங்கி சாப்பிட்டால் அனைத்து நோயும்  தீர்ந்துவிடும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Mahendran