மொபைலிலேயே திருக்கோவில்களை சுற்றி வரலாம்! – திருக்கோவில் செயலி!
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை திருக்கோவில்கள் அனைத்தின் தகவல்களையும் அறியும் வகையில் திருக்கோவில் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏராளமான திருக்கோவில்கள், தேவாரம் பாடப்பெற்ற ஸ்தலங்கள், திவ்ய தேச தலங்கள் அமைந்துள்ளன. இந்த கோவில்கள் யாவும் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. பக்தர்கள் கோவில்களை பற்றி முழுவதுமே அறிந்து கொள்ளும் வகையில் அறநிலையத்துறை திருக்கோவில் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.
இந்த செயலியில் முருகன் கோவில்கள், அம்மன் கோவில்கள், பெருமாள், சிவன், விநாயகர் கோவில்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு கோவில் பெயரை தேடுபொறியில் தேடி அக்கோவிலின் தல வரலாறு, பூஜை நேரம், என்னென்ன வசதிகள் உள்ளது உள்ளிட்ட பல தகவல்களையும் அறிய முடியும். சிறப்பு பூஜைகள், அன்னதானம் போன்றவற்றிற்கு வீட்டில் இருந்தபடியே எந்த கோவிலுக்கும் கட்டணம் செலுத்த முடியும்.
மேலும் 360 கோண பார்வை மூலம் ஸ்மார்ட்போனிலேயே கோவில் மற்றும் பிரகாரங்களை சுற்றி வர முடியும். கோவில் குறித்து ஆடியொவாகவும் தகவல்கள் சொல்லப்படுகிறது. கோவில் யாத்ரீகர்கள், பக்தர்களுக்கு பலவிதங்களில் பயனுள்ள வகையில் அமைந்துள்ள இந்த செயலியை நேற்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
Edit by Prasanth,K