1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Updated : வியாழன், 8 ஏப்ரல் 2021 (17:29 IST)

வீட்டில் உள்ள தீய சக்திகளை விலகிட பரிகாரங்கள் !!

ஆகாச கருடன் கிழங்கு: வீட்டின் நுழைவு வாயிலின் மேல் உட்புறமாக ஆகாச கருடன் கிழங்கை கட்டிவைக்க உள் நுழையும் எதிர்மறை ஆற்றலை ஈர்த்து கொள்ளும். அல்லது தடுத்து நிறுத்தும் சக்தி இதற்கு உண்டு.
 
மூலிகை வாசனை: வீட்டின் உட்புற பகுதியில் மனதிற்கு இனிமையான வாசனை இருக்கும்படி செய்யவும் இதற்கு இயற்கை மூலிகை வாசனை பொருட்களை  பயன்படுத்துங்கள்.
 
வரிகுமட்டி காய்: அம்மாவசை, ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில் வரி குமட்டிகாய் பச்சை காயாக எடுத்து வந்து நான்கு பாகமாக வெட்டி அதில் சிகப்பு தடவி வீட்டில் உள்ள நபர்களையும், வீட்டையும் சுற்றி போட துர்சக்திகள், துர்தேவதைகள், பேய், பிசாசு, தீய சக்திகள் விலகி போகும்.
 
சாம்பல் பூசணி: சாம்பல் பூசனிகாய் வாங்கி அதில் துளையிட்டு சிகப்பு போட்டு துளையை மூடி பொரிய கற்பூர வில்லை அதன் மேல் வைத்து பற்றவைத்து வீட்டை  ஒரு முறை சுற்றி வந்து முச்சந்தியில் உடைக்க தீய சக்திகள், எதிர்மறை ஆற்றல், கண்திருஷ்டி 
எல்லாம் விலகி போகும்.
 
தெய்வீக தன்மை: தூங்கும் அறை பிரகாசமாகவும், தெய்வீக தன்மை பொருந்தி இருத்தல் வேண்டும். முடிந்த வரை சுத்தமாகவும், கலைந்த உடைகளை அப்புறபடுத்தி வைக்கவும். அறை முழுவதும் வெண்மை நிறமாகவும், பொருட்கள் அழகாகவும், வரிசையாகவும் வைக்கவும். இதனால் நேர்மறை எண்ணங்கள் அதிகமாகும்.
 
கல் உப்பு கரைசல்: கல் உப்பு 50 கிராம் எடுத்து ஒரு பீங்கான் பாத்திரத்தில் போட்டு 100 மில்லி தண்ணீர் விட்டு கரைத்து வீட்டில் ஏதாவது ஓரிடத்தில் வைத்துவிட எதிர்மறை ஆற்றலை ஈர்த்து கொள்ளும். அவ்வப்போது மாற்றி வைக்கவும்.
 
படிகார கல்: படிகார கல் வாங்கி வீட்டின் நுழைவு வாயிலில் கட்டி வைக்க படிகார கல் எதிர்மறை ஆற்றலை ஈர்த்து கரைந்து போகும். படிகார கல் கரைந்து சிறியதாகும் போது மாற்றி வைக்கவும்.