திங்கள், 6 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By
Last Modified: சனி, 3 மார்ச் 2018 (18:16 IST)

இந்த கடவுளை வணங்கினால் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்

சூரியோதயத்திற்கு முன் தூக்கத்திலிருந்து விழித்தெழுங்கள். அதிகாலைப் பொழுது கடவுளைத் தியானம் செய்ய ஏற்றவேளை. இவ்வேளையில் விபூதி தரித்துக் கொண்டு கடவுளை சிந்திப்பது மிகவும் நல்லது.

 


* விக்னங்கள், இடையூறுகள் நீங்க - விநாயகர்
* செல்வம் சேர - ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்
* நோய் தீர - ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி
* வீடும், நிலமும் பெற - ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்
* ஆயுள், ஆரோக்கியம் பெற - ருத்திரன்
* மனவலிமை, உடல் வலிமை பெற - ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்
* கல்வியில் சிறந்து விளங்க - ஸ்ரீ சரஸ்வதி
* திருமணம் நடைபெற - ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை
* மாங்கல்யம் நிலைக்க - மங்கள கௌரி
* புத்திர பாக்கியம் பெற - சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி
* தொழில் சிறந்து லாபம் பெற - திருப்பதி வெங்கிடாசலபதி
* புதிய தொழில் துவங்க - ஸ்ரீகஜலட்சுமி
* விவசாயம் தழைக்க - ஸ்ரீ தான்யலட்சுமி
* உணவுக் கஷ்டம் நீங்க - ஸ்ரீ அன்னபூரணி
* வழக்குகளில் வெற்றி பெற - விநாயகர்
* சனி தோஷம் நீங்க - ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்
* பகைவர் தொல்லை நீங்க - திருச்செந்தூர் முருகன்
* பில்லி, சூன்யம், செய்வினை அகல - ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்
* அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற - சிவஸ்துதி