திங்கள், 6 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2022 (10:19 IST)

பஞ்சகவ்ய விளக்கில் அற்புத பலன்கள் !!

Panjakavya vilakku
பஞ்சகவ்ய விளக்கானது பால், தயிர், நெய், கோமியம், சாணம், இவைகளால் மட்டும் செய்யப்பட்டது. உங்களால் முடிந்தால் இந்தப் பொருட்களையெல்லாம் வீட்டில் வாங்கி வைத்து, பிசைந்து விளக்கு வடிவில் தயாரித்து, காயவைத்தும் ஏற்றி வைத்துக் கொள்ளலாம்.


வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அன்று வீட்டை துடைத்து சுத்தப்படுத்திவிட்டு, வீட்டில் ஏதாவது ஒரு பகுதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். கூடத்தின் நடுப்பகுதியாக இருந்தாலும் சரி. அங்கு சிறிது பன்னீர் தெளித்து, நன்றாக துடைத்துவிட்டு, அரிசிமாவில் கோலம் போட்டு, காவி தீட்டி, ஒரு தாம்பூலத்தின் மேல் பஞ்சகவ்ய விளக்கை வைத்து கட்டாயம் நெய்தான் ஊற்றவேண்டும். திரிபோட்டு ஏற்றிவிட வேண்டும்.

தீபம் மட்டும் எரிந்த பின்பு அனைத்து விடக்கூடாது. தீபத்தோடு சேர்த்து அந்த பஞ்சகவ்விய விளக்கும் ஹோமம் போல் எரிந்து சாம்பலாகும் வரை அதை அப்படியே விட்டு விட வேண்டும். எரிந்த சாம்பலை தினம்தோறும் நெற்றியில் இட்டுக் கொள்வது நல்ல பலனைத் தரும். இந்த ஹோமத்தை வாரம்தோறும் வெள்ளிக்கிழமையில் செய்வதில் எந்த தவறும் இல்லை. இதற்கு பெரிய செலவு ஆகாது. வேலைப்பளுவும் சுலபம்தான்.

இந்த ஹோமமானது லட்சுமிநாராயண பூஜை செய்ததற்கு சமமாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. உங்களால் முடிந்தால் இந்த தீபத்தை ஏற்றிய பின்பு ஏதாவது ஒரு பிரசாதம் செய்து இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைத்து குழந்தைகளுக்கு பிரசாதமாக விநியோகம் செய்யலாம். யாகம் செய்த புண்ணியத்தை, பரிபூரணமாக அடைய அன்னதானமும் சேர்ந்திருந்தால் நல்ல பலனைத் தரும்.