1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: சனி, 5 ஏப்ரல் 2025 (19:13 IST)

பழனி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்.. குவிந்த பக்தர்கள்.. !

பழனி முருகப்பெருமானின் மூன்றாவது படைவீடான திருஆவினன்குடியில், ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கிராமசாந்தி, வாஸ்து பூஜை, அஸ்திரதேவர் உலா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
 
காலை விநாயகர் பூஜையுடன் தொடங்கி, முருகப்பெருமானுக்கு பால், பழம், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளினார்.
 
பின்னர் வேத ஒலி முழங்க, கோயில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்ட போது பக்தர்கள் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என்று சரண கோஷம் எழுப்பினர்.
 
முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் ஏப்ரல் 10 ஆம் தேதி மாலை நடைபெற இருக்கிறது. அதன்பின் 11ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். இந்த விழாவுக்காக ஏப்ரல் 9 முதல் 13 வரை தங்கத் தேர் புறப்படுத்தப்படுகிறது.
 
விழா ஏற்பாடுகள் கோவில் நிர்வாகத்துடன் மாவட்ட நிர்வாகம் இணைந்து சிறப்பாக செய்துவருகிறது.
     
Edited by Mahendran