1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (18:42 IST)

அறிந்துக்கொள்ள வேண்டிய சில பயனுள்ள ஆன்மிக குறிப்புகள் !!

Lamp
செவ்வாய்கிழமை அன்னதானம் வழங்கினால் முருகனின் முழு அருளுக்கு பாத்திரமாகலாம். வீட்டில் மாலை 6.30 மணிக்கு அனைவரும் அவசியம் விளக்கேற்ற வேண்டும். விளக்கை குளிர்விக்கும் போது கையால் அணைக்கக் கூடாது. பூவினால் குளிர்விக்கலாம்.


அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணைய் ஊற்றி அதன்பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வ செழிப்பு உண்டாகும். மகிழ்ச்சி நிலவும், நல்ல வேலை கிடைக்கும்.

தினமும் தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தைபாக்கியம், மனதுக்கு ஏற்ற வரன் அமையும் மற்றும் சகலவித செல்வங்களும் கிடைத்து வாழ்வில் வளம் பெருகும். விநாயக பெருமானுக்கு 7 தீபம், முருகருக்கு 6 தீபம், பெருமாளுக்கு 6 தீபம், நாக அம்மனுக்கு 4 தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

சிவனுக்கு 3 அல்லது 9 தீபம், அம்மனுக்கு 2 தீபம், மகாலட்சுமிக்கு 8 தீபம் ஏற்றி வழிபட வேண்டும். தீராத நோய்கள் தீர ஞாயிறு மாலை ராகு காலத்திலும், தீபம் ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும்.

குடும்ப பிரச்சினைகள் தீர செவ்வாய் ராகு காலத்திலும், தீபம் ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும். குடும்பம் மட்டும் தனிப்பட்ட வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும், ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும்.

அவரவர் வசதிகேற்ப மனத் தூய்மையுடன் சிறு மண் விளக்கையாவது வீடுகளில் ஏற்றி வைத்து இறைவனை வழிபடுவது நல்லது. பஞ்சபூதத் தலங்கள்: 1. நிலம்- காஞ்சீபுரம், திருவாரூர், 2. நீர்- திருவானைக் காவல், 3. நெருப்பு- திருவண்ணாமலை, 4.வாயு- திருக்காளகஸ்தி, 5. ஆகாயம்- சிதம்பரம்.