புதன், 13 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 30 ஜூலை 2024 (20:21 IST)

நவராத்திரியில் இந்த மூன்று நாள் விரதம் மிகவும் முக்கியமானது.. எந்தெந்த நாட்கள்?

ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விரதம் ஏராளமானோர் கடைப்பிடித்து வரும் நிலையில் ஒன்பது நாளும் விரதம் கடைபிடிக்க முடியாதவர்கள் மூன்று நாட்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. 
 
ஒருவருக்கு நவராத்திரி ஒன்பது நாட்களில் பூஜை நடத்துவதற்கு போதிய வசதி இல்லாமல் இருந்தால் சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று தினங்களில் பூஜை செய்து விரதம் இருந்தால் நவராத்திரியின் ஒன்பது நாட்கள் பூஜித்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது 
 
நவராத்திரியில் விரதம் மேற்கொள்பவர்கள் இந்த பிறவியில் மட்டும் இன்றி மறுபிறவியிலும் பயன் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. கம்சனை அழிக்க கிருஷ்ணன் அவதரித்த நாள் அஷ்டமி என்று கூறப்படும் நிலையில் அந்த தினத்தில் பூஜை செய்தால் விசேஷம் கிடைக்கும் என்றும் அஷ்டமி நாள் என்பது தர்ஷனின் யாகத்தை பத்ரகாளி அளித்த தினம் என்பதால் நம்மை அழிக்க நினைப்பவர்களை அழித்துவிடும்  என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
எனவே நவராத்திரி ஒன்பது நாளில் பூஜிக்க முடியாதவர்கள் சப்தமி, அஷ்டமி, நவமி
ஆகிய மூன்று தினங்களில் பூஜை செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Mahendran