வியாழன், 15 ஜனவரி 2026
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 ஜூலை 2024 (19:52 IST)

வேதனை தீர வேண்டுமா? உடனே திருச்சி, உறையூர் வெக்காளியம்மனை கும்பிடுங்கள்..!

வேதனை தீர வேண்டுமா? உடனே திருச்சி, உறையூர் வெக்காளியம்மனை கும்பிடுங்கள்..!
திருச்சி அருகே உள்ள உறையூர் என்ற இடத்தில் இருக்கும் வெக்காளியம்மனை தரிசனம் செய்தால் எந்தவித வேதனையும் உடனே மறைந்து விடும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
 
ஆடி மாதம் வெக்காளியம்மன் கோவிலில் மிகவும் விசேஷமாக இருக்கும் என்றும் இந்த நேரத்தில் வெக்காளியை வணங்கினால் நினைத்தது நடந்துவிடும் என்றும் எந்த வேதனை என்றாலும் கவலை என்றாலும் உடனே தீர்ந்து விடும் என்றும் கூறப்படுகிறது.
 
இந்த கோவிலில் அம்மனுக்கு கருவறை இல்லை என்றும் வானமே கூரையாக கொண்டு இருக்கும் இந்த அம்மனை வணங்கினால் அதிகாரம், செல்வம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
உறையூரின் வடக்கு காவல் தெய்வமாக இருக்கும் இந்த வெக்காளியம்மனுக்கு மழை தான் அபிஷேகம் செய்யும் என்றும் நட்சத்திரங்களை மலர்களாக கொண்டு எழுந்தருளியிருக்கும் என்றும் அந்த பகுதியில் உள்ளவர்கள் கூறுகின்றனர். 
 
மதுரையை எரித்த பின் கண்ணகி இந்த கோவிலுக்கு வந்து தான் தன்னுடைய கோபத்தை தணித்தார் என்றும் புராணங்களில் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran