திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Siva
Last Updated : வெள்ளி, 16 டிசம்பர் 2022 (21:13 IST)

நாமக்கல் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா எப்போது?

Anjaneyar
நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் உலகப்புகழ் பெற்றது என்பதும் அந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வரும் அமாவாசை தினத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதிகளில் இந்த விழா கொண்டாடப்பட உள்ளது. 
 
இதனை அடுத்து நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 100008 வடை மாலை சாத்தி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜெயந்தி விழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்
 
 மேலும் 23ஆம் தேதி சாத்தப்படும் வடைகளை இருபத்தி ஒன்றாம் தேதி முதலே தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva