1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (18:45 IST)

மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகரின் சிறப்புகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன் சன்னதியில் இருந்து சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் தெற்கு நோக்கி முக்குறுணி விநாயகர் அமைந்துள்ளார்.
 
8 அடி உயரத்தில் நான்கு கரங்களுடன் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார்.  திருமலை நாயக்க மன்னர் காலத்தில், அரண்மனை கட்டுவதற்காக மண் எடுக்கும்போது மண்ணில் இருந்து முக்குறுணி விநாயகர் சிலை கிடைத்ததாக கூறப்படுகிறது.
 
மீனாட்சி அம்மன் கோவிலில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமிக்கு அடுத்து அதிக பக்தர்களை ஈர்க்கும் தெய்வம் தான் முக்குறுணி விநாயகர்.  'விநாயகர் சதுர்த்தி' அன்று 18 படி அரிசியில் செய்த மெகா கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
 
'குறுணி' என்றால் 6 படி, 'முக்குறுணி' என்றால் 18 படி என்று பொருள்.  18 படி அரிசியில் வெல்லம், தேங்காய், கடலை, எள்ளு, ஏலக்காய், நெய் போன்றவை சேர்த்து கொழுக்கட்டை செய்யப்படுகிறது.  பக்தர்களின் வேண்டுதல்களை விரைவில் நிறைவேற்றும் வல்லமை கொண்டவர் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது
 
 
Edited by Mahendran