வியாழன், 9 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: புதன், 7 பிப்ரவரி 2024 (18:41 IST)

மதுரை மீனாட்சி அம்மன் தெப்பக்குளத்தின் சிறப்புகள்..!

Meenakshi Amman Temple
பொதுவாக தமிழகத்தில் உள்ள பெரிய கோயில்களில் தெப்பக்குளங்கள் இருந்தாலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள தெப்பக்குளத்துக்கு தனி சிறப்பு உள்ளது.
 
 17ம் நூற்றாண்டில் திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்ட இந்த குளம்  16 அடி ஆழம் கொண்ட மிகப்பெரிய தெப்பக்குளம்.  மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ஒரு முக்கிய அங்கம் ஆகும்.
 
 கல், சுதை சிற்பங்கள், மாடங்கள், தூண்கள் கொண்ட அழகிய கட்டிடக்கலை அம்சங்கள்  தெப்பக்குளத்தைச் சுற்றி அமைந்துள்ளன.  மண்டபங்களில் சிற்பங்கள், ஓவியங்கள் நிறைந்துள்ளன.
 
மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் தலம்.  சித்திரை, ஆடி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி திருவிழாக்களில் தெப்ப உற்சவம் நடைபெறும்.  தெப்ப உற்சவத்தின் போது, தெப்பத்தில் அம்மன், சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.
 
Edited by Mahendran