1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 நவம்பர் 2023 (20:14 IST)

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் தேரோட்டம்: குவிந்த பக்தர்கள்..!

தென்காசி காசி விசுவநாதர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம்  திருக்கல்யாண விழா மற்றும் தேரோட்டம் பத்து நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் 
 
அந்த வகையில் கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கிய நிலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவதால் பக்தர்கள் தினசரி குவிந்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் ஒன்பதாம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. நான்கு ரத வீதிகளில் தேர் உலா வந்த போது ஏராளமான பக்தர்கள் திருவாசகம் பாடி கோஷங்கள் எழுப்பி மேளம் தாளங்கள் முழங்க உற்சாகமாக வடம் பிடித்து தேரை இழுத்தனர்.  
 
தேரோட்டத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் தேவஸ்தானம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  தேரோட்டத்தை முன்னிட்டு தென்காசியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.
 
Edited by Mahendran