1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (07:50 IST)

ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் என்ன??

ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பது அஸ்வமேத யாகம் மற்றும் கோதானம் செய்த பலனை கொடுக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. 

 
ஏகாதசி விரதம் இருக்க விரும்புபவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமி அன்று, ஒரு வேளை உணவு மட்டுமே உண்ண வேண்டும். அடுத்த நாள் ஏகாதசி அன்று முழு நாளும் விரதம் இருந்து ஸ்ரீ மஹாவிஷ்ணுவை நினைத்து தியானிக்க வேண்டும். 
 
ஸ்ரீமகாவிஷ்ணு பெருமாளின் புகழ்பாடும் திவ்ய பிரபந்தப் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம், ஸ்ரீ சூக்தம் விஷ்ணு சூக்தம் நாராயண சூக்தம் நாராயண உபநிஷத் தசாவதார ஸ்துதியை பாராயணம் செய்யலாம். மற்றும் ஸ்ரீமத் பாகவதம் ராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் புராணங்கள் படிக்கலாம்.
 
ஏகாதசி அன்று இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து ஸ்ரீஹரியை துதி செய்ய வேண்டும். பிறகு மறுநாள் காலை துவாதசி அன்று, ஸ்ரீ மகாவிஷ்ணுவின் நாமத்தை சொல்லியபடி துளசி தீர்த்தத்தை அருந்தி விரதத்தை முடித்துக்கொள்ளலாம்.