1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 11 ஏப்ரல் 2022 (13:41 IST)

அன்றாட சமையலில் ஆலிவ் ஆயில் உபயோகிப்பதால் என்ன பலன்கள்...?

ஆலிவ் ஆயில் கொண்டு சமைக்கும் உணவை நாம் எடுத்துக்கொள்ளும் போது கெட்ட கொழுப்பு உடலில் சேராது. உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பு செல்களை அகற்றி நல்ல கொழுப்பை உற்பத்தி செய்ய உதவுகின்றது.


கெட்ட கொழுப்பு உடலில் இருந்து அகற்றப்படுவதால் மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கபடுகிறது.

ஆலிவ் ஆயிலை நாம் சமையலுக்கு பயன்படுத்தினால் நம் உடலில் உள்ள இரத்த சர்க்கரையின் அளவு சீராகும். மேலும் இது நாள் பட்ட சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

தினமும் ஆலிவ் ஆயிலை பயன்படுத்தினால் ஆக்சிஜனேற்ற தடுப்பாக செயல்பட்டு நம்முடைய கல்லீரலை பாதுகாக்கும். மேலும் இது கல்லீரல் சுத்திகரிப்பனாகவும் செயல்படும்.

ஆலிவ் ஆயில் உபயோகிக்கும்போது மூளையில் அல்சைமர் எனும் ஞாபக மறதி நோய் குணமாகும். இது நம்முடைய மூளையில் ஏற்படும் அளவுக்கதிகமான புரத படலத்தை தடுக்கிறது.

தினமும் ஆலிவ் ஆயிலை உபயோகிப்பதால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க்கும். இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்ட்கள் மற்றும் வைட்டமின் ஈ சத்துக்கள் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.