1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (09:54 IST)

அமாவாசை அன்று செய்யக்கூடாத காரியங்கள் எவை?

அமாவாசை நாளன்று செய்யக்கூடாத சில விஷயங்களை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள். 
 
அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் இரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும். எனவே அப்போழுது படையல் போடாமல் இருக்க கூடாது. 
 
அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம் அல்லது நதியில் நீராடலாம். 
 
பெற்றோர் அல்லது மாமனார்/மாமியார் இல்லாதவர்கள் மட்டுமே அன்று தலை குளிக்க வேண்டும். மற்றவர்கள் தலை குளிக்க கூடாது. 
 
உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும்.

அதனால்  அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது பறிக்கக்வும் கூடாது.