ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வியாழன், 10 நவம்பர் 2022 (19:55 IST)

டிசம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட் எப்போது? திருப்பதி தேவஸ்தானம் தகவல்!

tirupathi
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் தரிசனம் செய்வதற்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் டிசம்பர் மாதத்திற்கான ரூபாய் 300 ஆன்லைன் தரிசன டிக்கெட் நாளை முதல் வெளியிடப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது 
 
ஒவ்வொரு மாதமும் ஏழுமலையானை பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக மாதம்தோறும் ரூபாய் 300 ஆன்லைன் டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே
 
அதன்படி நாளை அதாவது நவம்பர் 11ம் தேதி முதல் காலை 10 மணிக்கு ரூபாய் 300 கட்டண தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. டிசம்பர் மாதம் முழுவதும் தினமும் 25 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசனம் செய்யும் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் மொத்தம் 7.7 5 லட்சம் டிக்கெட்டுகள் வழங்க திட்டமிடப்பட்டு இருப்பதாக வும் திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran