1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வியாழன், 12 அக்டோபர் 2023 (19:13 IST)

யாராலும் பார்க்க முடியாத ஆலமரம்.. திருவண்ணாமலையில் ஒரு அதிசயம்..!

திருவண்ணாமலையில் யாராலும் பார்க்க முடியாத ஒரு ஆலமரம் இருப்பதாகவும் அந்த ஆலமரத்தை பார்க்க யாராவது சென்றால் குளவிகள் கொட்டி துரத்தி விடும் என்றும் கூறப்படுகிறது.  
 
திருவண்ணாமலை மலையின் வட சிகரத்தில் ஒரு மிகப்பெரிய ஆலமரம் உள்ளது. அந்த ஆலமரத்தில் அருணாச்சல ஈஸ்வரர் ஆழ்ந்த தவத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது இறைவனை நோக்கி இறைவனே தவம் இருக்கும் அதிசயம் இங்கு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த ஆலமரம் குறித்து கேள்விப்பட்ட ரமண மகரிஷி ஒருவரை அந்த ஆலமரத்தை பார்க்க ஆசைப்பட்ட அங்கு சென்றார். ஆனால் அவரை நிறைய குளவிகள் கொட்டி விரட்டி விட்டது. 
 
இந்த ஆலமரத்தை பார்க்க யார் சென்றாலும் குளவிகள் கொட்டி விரட்டி விடும் என்று இன்றும் நம்பப்படுகிறது. இந்த ஆலமரத்தில்  நிறைய சித்தர்கள் இன்றும் தவம் செய்து கொண்டிருப்பதாகவும் அதனால் தான் யாரும் அந்த ஆலமரத்தை நெருங்க முடியாத நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran