வெள்ளி, 14 பிப்ரவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வியாழன், 13 பிப்ரவரி 2025 (18:39 IST)

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா.. சிறப்பு ஏற்பாடுகள்..!

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் புகழ்பெற்றது. இக்கோவில் வளாகத்தில் இருக்கும் ஆனந்தசரஸ் குளத்தில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு தரிசனமளிக்கும் அத்திவரதர் உறங்கியிருக்கிறார். இந்த குளம் ஆண்டுக்கு நான்கு முறை  திறக்கப்படும்.
 
இந்த ஆண்டு, தெப்ப உற்சவத்திற்காக மூன்று நாட்களுக்கு குளம் திறக்கப்பட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம் நேற்று தொடங்கியது, மேலும் இது தொடர்ந்து மூன்று நாட்கள் மிகுந்த கோலாகலமாக நடைபெற உள்ளது.
 
நேற்று, விழாவின் முதல் நாளில், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் வரதராஜ பெருமாள், கோவில் குளத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முதல் நாளாக இருப்பதால், தெப்பம் மூன்று முறை குளத்தை சுற்றியது.
 
இன்று, விழாவின் இரண்டாம் நாளில், தெப்பம் ஐந்து முறை சுற்றிவர உள்ளது. நாளை, இறுதிநாளாக, ஒன்பது முறை தெப்பம் சுற்றி வர ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியின் தரிசனம் பெற்று வருகின்றனர். விழா சிறப்பாக நடைபெற கோவில் நிர்வாகம் அனைத்து தேவையான ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
    
Edited by Mahendran