திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 25 நவம்பர் 2022 (19:57 IST)

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் 108 தீபங்கள் கொண்ட ஆராதனை: பக்தர்கள் பரவசம்

kalahasthi
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் 108 தீபங்கள் கொண்ட ஆராதனை: பக்தர்கள் பரவசம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்பவர்கள் தவறாமல் காளகஸ்தி கோவிலுக்கு சென்று வருவார்கள் என்பதும் காளகஸ்தி கோவிலுக்கு சென்று வழிபடுபவர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று காளகஸ்தி சிவன் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு 108 தீபங்கள் கொண்ட பர்வ ஆரத்தி, சக்ர ஆரத்தி, கும்ப ஆரத்தி, மகா மங்கள ஆரத்தி எடுக்கப்பட்டதை அடுத்து பக்தர்கள் குவிந்தனர் 
 
இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பதி மாவட்டம் காளகஸ்தி கோவிலில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் கோவில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம் 
 
இந்த சிறப்பு அபிஷேகத்தை காண அந்த பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran