திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 20 டிசம்பர் 2021 (08:10 IST)

அய்யப்பன் கோவிலில் இன்றுமுதல் நெய் அபிஷேகம் செய்ய அனுமதி: கேரள அரசு அறிவிப்பு.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று முதல் மக்கள் நேரடியாக நெய் அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. 
 
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன என்பதும் அதில் பக்தர்கள் நேரடியாக நெய் அபிஷேகம் செய்ய அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து விட்டதால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் நேரடியாக நெய் அபிஷேகம் செய்யலாம் என கேரள அரசு தெரிவித்துள்ளது.
 
கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி தினமும் 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்றும் கேரள அரசு தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது