வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

குளிர் காலத்தில் சருமத்தை பராமரிக்க செய்ய வேண்டியது என்ன...?

குளிர் காலத்தில் சருமம், முடி போன்றவை வெகுவாக பாதிக்கப்படுகின்றன. சரும ஆரோக்கியம் என்பது வெளிப்புறத்தில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை மட்டுமல்ல; நாம் உண்ணக் கூடிய உணவையும் பொருத்தது. முறையான ஊட்டச்சத்தான உணவு, சருமம் ஆரோக்கியமாக இருக்க  உதவுகிறது. 
குறிப்பாக, சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிப்பதில் நீருக்கு முக்கிய பங்கு உள்ளது. தினமும் உணவில், அதிக அளவில் பழங்கள் காய்கறிகள்  சேர்த்துக்கொள்வது அவசியம்.
 
குளிர் காலத்தில், பலருக்கும் ஏற்படும் மற்றொரு பிரச்சனை உதடு வெடிப்பு. இதற்கு, உதடு வெடிப்பிற்கான எண்ணெய் அல்லது வெண்ணையை உதட்டில் தடவ லம். அதனால், வெடிப்பு குணமாவதுடன், உதட்டுக்கு கூடுதல் மென்மை கிடைக்கும். 
 
கற்றாழையில் இருக்கும் வைட்டமின், பீட்ட கரோட்டின் போன்றவை குளிர்காலத்தில் சருமத்தில் உண்டாகும் வறட்சியை நீக்கி முகத்துக்கு  தனி மினுமினுப்பை கொடுக்கும். சரும வறட்சியும், சருமத்தில் இருக்குன் வெள்ளை திட்டுகளும் மறையும்.
 
சருமத்தின் வறட்சியை தடுக்க மாய்ஸ்சுரைஸர் உதவும். ஆனால் இதை பயன்படுத்துபவர்களுக்கு இது குறித்து போதிய விழிப்புணர்வு இருக்கவேண்டும். குளிர்காலத்துக்கு ஏற்ற மாய்ஸ்சுரைஸர் ஏன்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். குளித்து முடிந்ததும் சருமத்தை ஈரம் போக துடைத்து உலர விட்டு மாய்ஸ்சுரைஸர் பயன்படுத்துங்கள்.
 
தோல் வறண்டு போகுதல் மற்றும் தோல் வெடிப்பதை தவிர்க்க, குளிக்க செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன், தேங்காய் எண்ணையை உடலில் தேய்க்கலாம். குளித்து முடித்தவுடன் மாய்ச்சரைசர்கள், கிரீம்கள் தடவ வேண்டியது அவசியம். குளிக்க பயன்படுத்தும் நீரில், சில  துளிகள் தேங்காய் எண்ணையைச் சேர்க்கலாம்.
 
தோல் வறட்சி உள்ளவர்கள், அடிக்கடி நீரில் உடலை கழுவக் கூடாது, அடிக்கடி கழுவினால், ஏற்கனவே குறைவாகவுள்ள ஈரப்பசை மேலும்  குறைந்து விடும். சோப்பு போட்டு குளித்தல் இன்னும் அதிகமாக வறட்சி ஏற்படும். எனவே, சோப்புக்கு மாற்றாக கடலை மாவை  பயன்படுத்தலாம்.