புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: புதன், 19 ஜனவரி 2022 (13:33 IST)

சருமத்திற்கு பொலிவை தரும் மஞ்சள் ஃபேஸ் பேக் !!

தயிர் மற்றும் மஞ்சளைப் பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் ஏற்படும் வயதான அறிகுறிகளையும் பெரிதும் குறைக்கலாம். மஞ்சள் மற்றும் தயிரில் முதுமை தோற்றத்தை போக்கும் தன்மை உள்ளது.


மஞ்சளில் காணப்படும் குர்குமின் சுருக்கங்களை நீக்குகிறது. தயிரில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் துத்தநாகம் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க வல்லது.

ஒரு டீஸ்பூன் மஞ்சள், ஒரு டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் சில துளிகள் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் கலந்து பேஸ்ட்டாக கலந்து முகத்தில் தடவவும். இந்த பேக்கை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இது சருமத்திற்கு பொலிவை தரும்.

சரும பிரச்சனைக்கு முட்டையின் வெள்ளைக்கருவை தயிர் மற்றும் மஞ்சளுடன் கலந்து தடவவும். இது முகப்பரு மற்றும் எண்ணெய் சரும பிரச்சனையை நீக்க வல்லது. இந்த பேக்கை தயாரித்த பிறகு, முகத்தில் 10 நிமிடங்கள் ஊற வைத்தல் அவசியம். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். முட்டையில் புரதம் உள்ளது, இது சருமத்திற்கு நன்மை பயக்கும்.

மஞ்சள், தயிர் மற்றும் ரோஸ் வாட்டர் கலவையில் சந்தனப் பொடியைக் கலக்கவும். இப்போது இந்த பேக்கை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவவும். ஃபேஸ் பேக் காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவவும். மஞ்சளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு, கிருமி நாசினிகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருக்கின்றன.

ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் மஞ்சள், ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் சில துளிகள் ரோஸ் வாட்டர் கலக்கவும். பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடங்கள் விடவும். அதன் பிறகு சாதாரண நீரில் முகத்தை கழுவவும். இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.