திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

அடர்த்தியான கருப்பான தலைமுடியை பெறுவதற்கான குறிப்புகள்....!!

நல்லெண்ணெய் கூந்தலுக்கு கருமை நிறத்தை தரும் என்பது தெரியும். எனவே இந்த எண்ணெய் முடிக்கு பயன்படுத்தினால், அது முடியில் இருக்கும் கருமை நிறத்தை தக்க வைக்கும்.

முடிக்கு ஒரு மாத காலமாக எண்ணெய் தடவாமல் இருந்தால், கூந்தல் ப்ரௌன் நிறத்தில் மாற ஆரம்பிக்கும். 
 
வாரத்திற்கு இரண்டு முறையாவது எண்ணெய்யை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைக்கு மசாஜ் செய்வதால் கூந்தல் ஆரோக்கியமாகவும், கருமை நிறத்துடனும்  இருக்கும்.
 
கறிவேப்பிலையை வெயிலில் காயவைத்து, சூடான எண்ணெயில் சேர்த்து, ஒரு வாரத்திற்கு குளிர வைத்து, மசாஜ் செய்தால், கருமையான முடியைப் பெறலாம்.
 
செம்பருத்தி எண்ணெய்யையோ அல்லது சூடான எண்ணெயில் செம்பருத்தி பூக்களை போட்டு ஊறவைத்தோ, தினமும் முடிக்கு தடவ வேண்டும்.
 
நெல்லிக்காய் கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு மட்டும் பயன்படுவதில்லை. கருமையான கூந்தலைப் பெறவும் தான் உதவியாக உள்ளது. 
 
நெல்லிக்காய் சாறு கொண்டு, வாரத்திற்கு இரண்டு முறை மசாஜ் செய்து வந்தால், கூந்தல் கருமையோடும், அடர்த்தியோடும் வளரும்.
 
அஸ்வகந்தா பொடியை எண்ணெய்யில் சேர்த்து ஊறவைத்து முடிக்கு தடவி வந்தால், முடி நன்கு அடர்த்தியாக, கருமையாக மற்றும் நீளமாக வளரும்.