செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

சரும வறட்சியை தடுக்க உதவும் சில இயற்கை அழகு குறிப்புகள் !!

சரும வறட்சியைத் தடுக்க ஆலிவ் எண்ணெய் அல்லது ஆல்மண்ட் எண்ணெய் தடவிக்கொண்டு சூரிய ஒளி படுமாறு இருக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.

* காலையும், மாலையும் ஸ்கின் மாய்ஸ்ரைசர் உபயோகப்படுத்துவதன் மூலம் சருமத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்கலாம்.
 
* உதடுகளில் ஏற்படும் வறட்சியைப் போக்க காலை, மாலை இருவேளை உதடுகளில் வெண்ணெய்யைப் பூச வேண்டும். ரோஜாப்பூ இதழ்களை பால் விட்டு அரைத்து தடவி வந்தாலும் வெடிப்பு ஏற்படாது.
 
* தோல் சீவிய வெள்ளரிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அத்துடன் நான்கு டீஸ்பூன் ஆல்மண்ட் எண்ணெய், ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து அரைக்க  வேண்டும். இதை பேஸ் பேக்காக முகத்தில் போட்டு அரைமணி நேரம் கழித்து கழுவ வேண்டும். உங்கள் முகத்தில் புதுப்பொலிவு உண்டாகும்.
 
* பாத வெடிப்பு வராமல் தடுக்க வாரம் ஒருமுறை நீரில் எலுமிச்சை சாறு, சிறிது உப்பு, தரமான ஷாம்பு சிறிது கலந்து கால்களை அதனுள் பத்து நிமிடங்கள்  அமிழ்த்தி ஊறவைக்க வேண்டும். பிறகு ப்யூமிக் ஸ்டோன் கொண்டு பாதத்தை தேய்த்துவிட்டு ஈரமில்லாமல் துடைக்க வேண்டும். பிறகு மாய்ஸ்ரைஸர் தடவவும்.
 
* வாழைப்பழம், தேன், பன்னீர் ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி பதினைந்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் வறண்டு போகாமல் இருக்கும்.
 
* பாசிப்பருப்புடன் ஆரஞ்சு பழத்தோல் மற்றும் பால் ஆகியவை சம அளவு எடுத்து அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் சருமம் வறண்டு  போகாமல் தடுக்கலாம்.