திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 1 ஜூலை 2022 (10:19 IST)

கண் கருவளையம் விரைவில் போக்க உதவும் சில அழகு குறிப்புகள் !!

Dark Circle
சரியான நேரத்தில் உறங்காமல் கணினி மற்றும் கைபேசியில் நேரத்தை கழிப்பதால் தான் பெரும்பாலும் கருவளையம் ஏற்படுகின்றது.


தினமும் 7 முதல் 8 மணிநேரம் உறங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள். சரியான ஆரோக்கியமான தூக்கத்தை பின்பற்றும் போதே இலகுவாக கண் கருவளையத்தில் இருந்து விடுபடலாம்.

சிலருக்கு ஊட்டச்சத்து குறைபாட்டாலும் கண் கருவளையம் ஏற்படுகின்றது. உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை உண்பது மிகவும் அவசியம்.

அதிக வெயில் காரணமாகவும் கண் கருவளையம் ஏற்படுகின்றது. வெயில் காலங்களில் வாரம் ஒரு முறை கண்களை குளிர்ச்சிப்படுத்தும் வெள்ளரியை துண்டாக வெட்டி கண்களின் மேல் வைப்பது சிறந்தது. இது கண்களுக்கு குளிர்ச்சியை கொடுப்பதுடன் கருவளையம் ஏற்படுவதையும் முற்கூட்டியே தடுக்கிறது.

கண்களுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் சிறந்த பொருள் தான் கற்றாழை. கற்றாழை சாற்றை கண் கருவளையம் உள்ள இடத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் மிகவிரைவில் கண் கருவளையத்தில் இருந்து விடுபடலாம்.

மஞ்சளுடன் தேங்காய் எண்ணெய் அல்லது பாதம் எண்ணெய் கலந்து கண்களை சுற்றி தடவி 10 நிமிடங்கள் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு மூன்று தடவை செய்து வந்தால் கண் கருவளையம் விரைவில் நீங்கும்.

எலுமிச்சை சாற்றில் வைட்டமின்-சி அதிகம் நிறைந்துள்ளது. இது அனைவரும் அறிந்த ஒன்றே. இது முகத்தில் உள்ள கருமையை போக்கும் தன்மை கொண்டது.

குறிப்பாக கண் கருவளையங்களை விரைவாக நீக்கும். அதற்கு எலுமிச்சை சாற்றை கண்களை சுற்றி தடவி 10 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் காலை மாலை என இரண்டு வேளைகள் செய்து வந்தால் கண் கருவளையம் விரைவில் மறைந்து விடும்.