Daily Horoscope
✕

கூந்தலை பாதிக்கும் பொடுகு பிரச்சினைகளுக்கான தீர்வுகள் !!

Written By Sasikala
Updated: புதன், 10 மார்ச் 2021 (11:29 IST)

சாம்பார் வெங்காயம் அதாவது சின்ன வெங்காயம் கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்த்து. பிறகு 15 நிமிடம் கழித்து குளிக்க பொடுகு தொல்லை நீங்கும். பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிடம் கழித்து குளிக்கவும். தலையில் தயிர் தேய்த்தும் குளிக்கலாம்
 
வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும். பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிப்பது பொடுகுக்கு ரெம்ப நல்லது
 
வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும். அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து நன்றாக காய்ச்சி பின்னர் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.
 
வேப்பிலை சாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்த்து குளிக்கலாம். வசம்பு பவுடரை தேங்காய் எண்ணெய்யில் ஊறவைத்து தேய்க்கலாம். தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.
 
மருதாணி இலையை அரைத்து அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து, இந்த கலவையை தலையில் தேய்த்து குளிக்கவேண்டும்.
 
வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து 1 மணி நேரம் ஊறவைத்து பின்பு குளிக்கலாம். மண்டை கரப்பான் நோய் குணமாக பப்பாளி பாலையும் படிகாரத்தையும் சேர்த்து தடவலாம்.

எல்லாம் காட்டு

உடல் ஆரோக்கியத்தை பேணும் அற்புத விதைகள்!.. வாங்க பார்ப்போம்...

நோய் இருப்பதே தெரியாமல் 3.86 கோடி பேர்!.. இந்தியாவில் அதிகரிக்கும் நீரிழிவு நோய்...

லேட்டா தூங்குபவர்களுக்கு சீக்கிரம் மரணம் - எச்சரிக்கும் ஆய்வு

ஆண்களின் விந்தணுவை அதிகப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் எது? - வாங்க பார்ப்போம்

அடுத்த கட்டுரையில்
Show comments