வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

முட்டை ஓட்டை பயன்படுத்தி சருமம் பளபளப்பாக்கும் குறிப்புகள் !!

முட்டை ஓட்டினை பொடி செய்து, அதனுடன் முட்டை வெள்ளைகருவை கலந்து முகத்தில் தேயுங்கள். காய்ந்த பின் கழுவவும். கழுவிய உடனே உங்களுக்கு வித்தியாசம் தெரியும். இதனை வாரம் ஒரு முறை செய்து பாருங்கள். எப்போதும் உங்கள் முகம் மின்னும்.

வெண்மையான பற்கள் பெற, அப்படியெனில் இந்த குறிப்பு உபயோகமானதாக இருக்கும். முட்டை ஓட்டினை மிக்ஸியில் சுற்றி நன்றாக பொடித்துக் கொள்ளுங்கள்.
 
தினமும் பல் விளக்கியவுடன், இதனைக் கொண்டு பற்களில் தேயுங்கள். முட்டை ஓட்டில் கால்சியம், பொடாசியம் மற்றும் மினரல்கள் உள்ளன. இவை பற்களுக்கு பலம் தருகிறது. எனாமலை இறுகச் செய்கிறது. பற்களின் சிதைவை தடுக்கிறது.
 
சென்ஸிடிவ் சருமத்திற்கு எந்த க்ரீம் போட்டாலும் அலர்ஜியாகிவிடும். இயற்கையான அழகு சாதனங்களைதான் முகத்திற்கு உபயோகப்படுத்த வேண்டும். அவ்வகையில் முட்டை ஓடு சென்சிடிவ் சருமத்திற்கு அற்புத பலன்களை தருகிறது. 
 
முட்டை ஓட்டினை நன்றாக பொடித்து, அதனுடன் சிறிது ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து, 5 நாட்கள் ஊறவிடுங்கள். பிறகு ஒரு பஞ்சினைக் கொண்டு இந்த கலவையில் நனைத்து, முகத்தில் தேயுங்கள். காய்ந்ததும் கழுவலாம்.
 
முட்டை ஓட்டின் பொடியுடன், இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து பேஸ்ட் செய்யவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி பின்னர் கழுவவும். இதை தொடர்ந்து செய்வதால் சரும பளபளப்பு அதிகரிக்கும்.