1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு அற்புத நிவாரணம் தரும் கறிவேப்பிலை !!

கறிவேப்பிலையின் இலை, ஈர்க்கு, பட்டை, வேர் முதலியன உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. கருவேப்பிலை சாப்பிட்டால் கண் பார்வைக்கோளாறு அணுகாது. எலும்புகள் பலப்படும் சோகை நோய் வரப்பயப்படும். புண்கள் விரைவில் ஆற கறிவேப்பிலை உதவுகிறது.

வாய்ப்புண் உள்ளவர்கள் கறிவேப்பிலை சாப்பிட்டால் வாய்ப்புண் ஆறிவிடும். வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளைப்போக்கும் குணம் கறிவேப்பிலைக்குண்டு. மலச்சிக்கலைப் போக்கும், ஜீரணசக்தியைக் கூட்டும், பேதியைக் கட்டுப்படுத்தும். பித்தத்தைக் கட்டுப்படுத்தி வாந்தியைத் தடுத்து வயிற்றில் ஏற்படும் வயிற்று  இரச்சலைத் தடுக்கும்.
 
கறிவேப்பிலையை தினமும் உட்கொண்டால் குமட்டல், சீதபேதியால் வரும் வயிற்று பிரச்சனைகள், நாள்பட்ட காய்ச்சல் போன்றவை நீங்கும்.
 
கறிவேப்பிலையில் உயிர்சத்து மிகுதியாக உள்ளது. இது உடலுக்கு பலத்தை கொடுக்கிறது. கறிவேப்பிலை பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது. இது பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும் குணம் உடையது.
 
கறிவேப்பிலையின் இலை, பட்டை, வேர் இவைகளை கசாயம் செய்து கொடுத்தால் பித்தம், வாந்தி நீங்கும். உலர்த்திய கறிவேப்பிலையை இத்துடன் மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவற்றை பொடியாக்கி சோற்றுடன் நெய் கலந்து சாப்பிட, மந்த பேதி, மலக்கட்டு நோய்கள் குணமாகும்.
 
உடலில் உள்ள கெட்டக் கொழுப்பினைக் குறைக்கிறது: நல்ல கொழுப்பின் அளவை அதிகப்படுத்துகிறது. கறிவேப்பிலை உடலுக்கு பலத்தை கொடுக்கக்கூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது.
 
கறிவேப்பிலையை உணவோடு சேர்த்து சாப்பிடுபவர்களுக்கு இதய தசைகள் வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாவது தடுக்கபடுகிறது.