வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

அக்குள் பகுதியில் ஏற்படும் கருமையை நீக்க உதவும் இயற்கை குறிப்புகள் !!

பலருக்கும் கருமையான அக்குள் தர்ம சங்கடத்தையும், அசௌகரியத்தையும் உண்டாக்கும். இப்படி அக்குள் கருமையாவதற்கு வியர்வை, அதிகப்படியான இறந்த செல்கள் சேர்வது, அக்குள் முடியை ஷேவ் செய்வது, சுத்தமில்லாமை, குறிப்பிட்ட டியோடரண்ட் போன்றவை காரணங்களாகும்.

இதனை இயற்கை வழிமுறைகளை கொண்டு நீக்க முடியும். அரிசி ஸ்கரப் செய்வதன் மூலம், வியர்வை மற்றும் துர்நாற்றம் கட்டுப்படுத்தப்படும். மேலும் இந்த ஸ்கரப் செய்வதால் அக்குளில் உள்ள கருமை நீங்கி விரைவில் வெள்ளையாகும்.
 
ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் அரிசி பவுடர், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 2 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அக்குளை வெதுவெதுப்பான நீரால் கழுவி, பின் கலந்து வைத்துள்ள கலவையை தடவி மென்மையாக 5 முதல் 10 நிமிடம் ஸ்கரப் செய்ய வேண்டும். பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
 
அரிசி பவுடர் அக்குளில் உள்ள இறந்த செல்களை நீக்கி, அழுக்குகளை வெளியேற்றும். மேலும் இதில் உள்ள பேக்கிங் சோடா அக்குளில் இருக்கும் பாக்டீரியாக்களை அழித்து வெளியேற்றும். எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால், அக்குள் வெள்ளையாகும் மற்றும் தேன் ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ளும்.
 
இந்த பேக்கை அக்குளில் போடுவதன் மூலம் அக்குள் வேகமாக வெள்ளையாகும். குறிப்பாக இதில் உள்ள கடலை மாவு சருமத்தை நன்கு சுத்தம் செய்யும்.