வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி பளிச்சிட செய்யும் முல்தானி மெட்டி ஃபேஸ் பேக் !!

பெரும்பாலான அழகு நிலையங்களில் கூட சரும நிறத்தை அதிகரிப்பதற்கு முல்தானி மெட்டி ஃபேஸ் பேக் தான் பரிந்துரைக்கப்படுகிறது. 

முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை அழகு நிலையங்களுக்குச் சென்று போடுவதற்கு பதிலாக, அந்த பொடியை வீட்டில் உள்ள சில பொருட்களுடன் சேர்த்து மாஸ்க் போட்டு வந்தால், சரும நிறம் அதிகரிப்பதோடு, சரும பிரச்சனைகள் வராமலும் தடுக்கலாம்.
 
ஒரு சிறிய பௌலில் முல்தானி மெட்டி பொடியைப் போட்டு, ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகம் பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்கும்.
 
ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் பேஸ்ட்டுடன், 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் சிறிது முல்தானி மெட்டி பொடி சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் முகத்தை நீரால் கழுவி, தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி காய்ந்த பின், நீரால் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால், சருமம் மென்மையாக இருக்கும்.
 
ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ், 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி, 1 டீஸ்பூன் சந்தன பவுடர் மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இந்த மாஸ்க்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பளிச்சென்று காணப்படும்.
 
1 டேபிள் முல்தானி மெட்டி பொடி, 1 டேபிள் ஸ்பூன், தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பப்பாளி கூழ் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்தில் சரிசமமாக தடவி, நன்கு காய வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினால், விரைவில் வெள்ளையாகலாம்.