1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: வியாழன், 28 ஜனவரி 2021 (15:50 IST)

சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் பால் !!

பாலை தினமும் முகத்தில் தடவி சிலநேரம் மசாஜ் செய்தோம் என்றால் முகம் மிகவும் அழகாகவும், பொலிவுடனும், முகம் மிகவும் மென்மையாகவும் இருக்கும்.

முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், தேமல்கள், அலர்ஜி, வறண்ட சருமம், முகத்தில் தோன்றும் பருக்கள் மற்றும் முக சுருக்கங்கள் ஆகிய பிரச்சனைகளை  குணப்படுத்த பால் மிகவும் உதவுகிறது.
 
முகத்தில் தோன்றும் இறந்த செல்களை வெளியேற்றி, புதிய செல்களை பிறக்க வைப்பதுடன் முகம் பளபளக்க செய்யும். முகத்தில் தோன்றும் சுருக்கங்களை  அகற்றி முகத்தை என்றும் இளமையாக வைத்துக்கொள்கிறது.
 
தினமும் பாலுடன் 1/2 துண்டு வாழைப்பழத்தை சேர்த்து பேஸ்டு போல் அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ முக சுருக்கங்கள் மறைந்து  விடும்.
 
வாரத்தில் இரு முறையாவது உடல் முழுக்க பாலை தடவி அல்லது குளிக்கும் நீரில் பாலை கலந்து குளித்து வரலாம். இதன் மூலம் முகத்தில் தோன்றும் எண்ணெய் பசை மற்றும் இறந்த செல்கள் முற்றிலும் அகன்று, முகம் பொலிவுடன் காணப்படும். மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
 
முகத்தில் தோன்றும் சுருக்கங்களை கட்டுப்படுத்த தினமும் முகத்தில் பால் தடவ வேண்டும். இது முக சுருக்கத்தை கட்டுப்படுத்த மிகவும் உதவுகிறது.
 
சூரிய ஒளியினால் முகத்தில் ஏற்படும் தடிப்புகள், வறண்ட சருமம், சரும அரிப்புகள் போன்ற பிரச்சனையை சீர் செய்கிறது. மேலும் சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வழிவகுக்கிறது.