புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

மிருதுவான சருமத்துக்கு தொடர்ந்து ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது நல்லதா...!!

ஆரஞ்சு ஜூஸில் அதிகளவு நார்சத்து உள்ளதால் இது கொழுப்பை கரைத்து உடல் எடையை விரைவில் குறைக்கிறது.


ஆரஞ்சு ஜூஸ் தினமும் குடிப்பதினால் சிறுநீரக கற்கள் உருவாவது தடுக்கப்படும். ஆரஞ்சில் உள்ள அமில பண்பு இந்த கற்களை உண்டாகிறது.
 
ஆரஞ்சு ஜூஸில் அதிகளவு நார்சத்து உள்ளதால் இது கொழுப்பை கரைத்து உடல் எடையை விரைவில் குறைக்கிறது. ஆரஞ்சில் இருக்கும் ஆன்டி அக்சிடெண்ட் விரைவில் முதுமை அடைவதை தள்ளி இளமையான சருமத்தை தருகிறது. மேலும் இது வயிற்றில் ஏற்படும் அல்சர் நோயை குணப்படுத்துகிறது.
 
ஆரஞ்சில் உள்ள மெக்னீசியம் இரத்த நாளங்களை விரிவடைய செய்து சோடியம் அளவை குறைத்து இரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது. ஆரஞ்சு ஜூஸ் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை பெருக்கி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
 
நோய் எதிர்ப்பு சக்தி: ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. கால்சியம் எலும்புக்கு நல்லது. ஆரஞ்சில் உள்ள கால்சியம் நிச்சயம் உங்கள் எலும்புகளைப் பாதுகாக்கும்.
 
சருமப் பாதுகாப்பு: இதில் உள்ள ஆண்டிஆக்சிடண்ட் மற்றும் வைட்டமின் சி கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கிறது. இதனால் சருமம் பளபளப்பாக இருக்கும். இளமையான மற்றும் மிருதுவான சருமத்துக்கு தொடர்ந்து ஆரஞ்சு ஜூஸ் குடியுங்கள்.
 
உடல் எடை: மிக குறைந்த அளவே கலோரிகள் மற்றும் கொழுப்பே இல்லாத ஒரு பழம். இதனால் உங்கள் டயட்டில் ஆரஞ்சு ஜூஸை தினமும் சேர்த்து  கொள்ளலாம்.