1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

அழகு பராமரிப்பில் அரிசி மாவு எவ்வாறு பயன் தருகிறது தெரியுமா...?

அரிசியை மாவாக்கி நமது முகம் மற்றும் சரும பொலிவிற்கு பயன்படுத்தலாம். அதிக செலவின்றி சுலபமாய் கிடைக்கும் அரிசி மாவில் இளமையை தக்க வைக்க  உதவும்.

அரிசியில் உள்ள உயர்வான விட்டமின் டி சத்து வாயிலாக புதிய செல் உருவாக்கம் நடைபெற்றது. அதனால் வயோதிக தோற்றம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. அரிசி மாவின் மூலம் சருமம் வழுவழுப்புடன், பிரகாசமாக பொலிவுடன் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
 
அரிசி மாவுடன் சர்க்கரை சேர்த்து உருட்டி முகத்தில் இலேசாக மசாஜ் செய்யவும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மூக்கு நுனிகள் கழுத்தில் இருக்கும் கருமைகள் போன்ற இடங்களில் சற்று அழுத்தமாக ஸ்கரப் செய்து பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். பிறகு ஐஸ்கட்டிகள்கொண்டு முகத்துக்கு ஒத்தடம் கொடுக்கவேண்டும். முதல்முறை செய்யும் போதே முகத்தில் பளிச்சென்று இருப்பதை பார்க்கலாம். 
 
விழாக்களுக்கு செல்லும் போது அதிக மேக் அப் பயன்படுத்துபவர்கள் ஆக இருக்கட்டும், சாதாரணமாக மேக் அப் பயன்படுத்துபவர்களாக இருக்கட்டும் இரவு  தூங்கும் போது மேக் அப் கலைத்த பிறகு படுக்கவேண்டும். இல்லையெனில் அதில் இருக்கும் இரசாயனங்கள் சருமத்தில் பாதிப்பை உண்டாக்கும்.
 
அரிசி மாவு - 2 டிஸ்பூன், தேன் - ஒரு ஸ்பூன், கற்றாழை பசை 2 டிஸ்பூன் இவை மூன்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்யவும். இதன் மூலம் முகப்பரு ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் கிருமிகள் வெளியேற்றப்படும். தேன் வாயிலாக சருமத்தின் கரும்புள்ளிகள் நீங்கும்.
 
முகத்தை வெண்மையாக்குவதில் அரிசி மாவும் வெள்ளரியும் நல்ல பலனை தருகின்றன. 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவுடன் 1 டிஸ்பூன் வெள்ளரி சாறு கலந்து  முகம், கழுத்து என பூசி 15 நிமிடம் கழித்து கழுவவும். முகம் பளபளப்புடன் தோன்றும்.