சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிடுவதால் என்ன பலன்கள்...?

Sasikala|
தினமும் நாம் சுரக்காய் கொண்டு செய்யப்படும் பதார்த்தங்கள் சாப்பிட்டு வர கல்லீரலில் படிந்திருக்கும் நச்சுத்தன்மை முற்றிலும் நீங்கி விடும்.

சுரைக்காய் பக்குவம் செய்து சாப்பிடுவதால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் தாக்காமல் காப்பதோடு நமது தோலுக்கு மினுமினுப்பையும் கொடுக்கும்.
 
சுரைக்காய் ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கி காய் ஆகும். சுரைக்காய் அடிக்கடி சாப்பிடுவதால் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற உதவுகிறது. எனவே, சிறுநீரகக்  கோளாறு உள்ளவர்கள் பழுத்த சுரைக்காயை ரசமாக்கி, அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசத்தையும் சேர்த்து அருந்தினால் சிறுநீரம் சம்பந்தமான  பிரச்சனைகளில் சிறந்த முன்னேற்றம் உண்டாகும். 
 
நாவறட்சி நீங்கும் கொழுப்புச்சத்துள்ள உணவு வகைகளையும் வறுத்த உணவு வகைகளையும் அதிகம் சாப்பிட்டவர்களுக்கு அதிகமாய் தண்ணீர்த் தாகம் எடுக்கும். 
வயிற்றுப்போக்கு ஏற்பட்டவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் இதே பிரச்சினை உண்டு. இவர்களுக்கு நாக்கு வறட்சி ஏற்படும் சமயம் ஒரு கப் பச்சையான  சுரைக்காய் ரசத்தில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு அருந்தினால் நாவறட்சி நீங்கும். உப்பு போடாமல் இந்த ரசத்தை அருந்தக்கூடாது.
 
பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் ஒரு சிறந்த இயற்கை மருத்துவ உணவாகும். சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் விரைவிலேயே  சமநிலைப்படும்.
 
தினமும் ஒரு வேளை சுரைக்காய் சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் ஆறும். வயிற்றில் ஏற்படும் பாதிப்புகள், மலச்சிக்கல் போன்றவை தீரும். குறிப்பாக மூலநோய்  உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்துவ உணவாக இருக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :