Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயிரை பயன்படுத்தி சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்வது எப்படி...?

Written By Sasikala
Updated: வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (14:41 IST)
 
சிலருக்கு சருமம் பொலிவிழந்து, சருமம் மிகவும் கருமையாக காணப்படும். இதற்கு ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை கலந்து சருமத்தில் ஒரு பேக்காக போடவும், பின்பு 20  நிமிடங்கள் வரை காத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவவும். இவ்வாறு செய்வதினால் சருமத்தில் ஏற்பட்டுள்ள கருமை நிறம் மறைந்து, சருமம் பொலிவுடன் காணப்படும்.
ஒரு ஸ்பூன் அரைத்த புதினா பேஸ்ட், ஒரு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து, இந்த கலவையை  சருமத்தில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடங்கள் வைத்து குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவவும். இவ்வாறு செய்வதினால் சருமத்தை  பொலிவுடனும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளலாம்.
 
ஒரு துண்டு வெள்ளரிக்காய், இரண்டு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் ஓட்ஸ் அல்லது கடலை மாவு ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து ஒரு  முறை அரைத்து போட்டு வருவதால், சருமத்தில் ஏற்படும் கருமை திட்டுக்கள், கரும்புள்ளிகள், சருமத்தில் படிந்திருக்கும் அழுக்கு மற்றும்  ஆயில் சருமம் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments