வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு உடல் உஷ்ணத்தை குறைப்பது எப்படி...?

Sasikala|
பருவ நிலை மாற்றத்தினால் பலருக்கும் உடல் உஷ்ணம் ஏற்படும். குறிப்பாக இந்த பிரச்சனை அதிக நேரம் வெயிலில் பணிபுரிபவர்களுக்கும், அதிக நேரம் நாற்காலியில் அமர்ந்து பணிபுரிபவர்களுக்கு இந்த உடல் உஷ்ணம் ஏற்படுகிறது.
உடல் உஷ்ணத்தினால் உச்சந்தலை முதல் உள்ளங்காள் வரை அனைத்து பகுதிகளும் ஆரோக்கியத்தை இழந்துவிடுகிறது. மேலும் முடி உதிர்வும் வயிற்று வலி, முக பருக்கள் போன்ற எரிச்சலை மூட்டும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
 
தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய் - 1/2 குழிக்கரண்டி அளவு, பூண்டு - மூன்று பற்கள், மிளகு - 5.
 
செய்முறை: அடுப்பில் ஒரு வாணலியை வைக்கவும். அவற்றில், சிறிதளவு நல்லெண்ணெய்யை ஊற்றவும், இப்போது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொள்ளவும். பின்பு தோல் நீக்காத பூண்டு மூன்று பற்கள், ஐந்து மிளகு ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் இரண்டு  நிமிடங்கள் வரை பொறித்து, பின்பு அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.
 
பயன்படுத்தும் முறை: இந்த எண்ணெயை மிதமான சூட்டில் எடுத்து கொண்டு, உங்கள் கால் விரலின் பெருவிரலில் தடவி, இரண்டு நிமிடம் கழித்து, கால்களை கழுவவும். இந்த எண்ணெய்யை மனம் அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் உடல் உஷ்ணம் உள்ளவர்கள் பயன்படுத்தலாம். 
 
குறிப்பு: காய்ச்சல், இருமல், சளி போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடாது.


இதில் மேலும் படிக்கவும் :