ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

தலைமுடி அடர்த்தியாக வளர உதவும் கூந்தல் பராமரிப்பு முறைகள் !!

தலைமுடி அடர்த்தியாக வளர கூந்தல் பராமரிப்பு முறை மிகவும் அவசியம். அதாவது தலைமுடியை சுத்தமாக வைத்து கொள்ளவேண்டும். தலையை சிக்கி கொள்ளாமல் பார்த்து கொள்ளவேண்டும்.

தலையில் அதிகம் சிக்கு இருந்தால் பெரிய பற்கள் உள்ள சீப்பினை பயன்படுத்து சிக்கினை எடுங்கள். இதன் மூலம் தலையில் முடி அதிகம் உதிர்வதை தடுக்கலாம்.
 
தலைக்கு குளித்துவிட்டு தலைமுடியை அப்படியே ஈரமாக வைத்திருக்க கூடாது. இதனால் அதிகளவு முடி உதிர்வு பிரச்சனை ஏற்படும். தலை குளித்த உடனே தலை நன்றாக உலர்த்தவேண்டும்.
 
கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் 4 இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்தால் கூந்தல் அடர்த்தியாக வளரும்.
 
வாரம் ஒருமுறை வெண்ணெய்யை தலைக்குத் தடவி ஒரு மணிநேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.
 
முட்டையில் நிறைந்துள்ள புரோட்டீன்கள் முடிக்கு அற்புதமான போஷாக்கை அளித்து, வேகமாக முடி வளர உதவுகிறது. முட்டையின் வெள்ளைக் கருவுடன், ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை நன்றாக கலந்து முடி மற்றும் உச்சந்தலையில் அப்ளை செய்து பின்னர் 20 நிமிடம் கழித்து ஷாம்பூ போட்டு முடியை அலசலாம்.
 
வாரம் ஒருமுறை செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து சீயக்காய் போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.