அரிசி கழுவிய நீர் எதற்கெல்லாம் பயன் தருகிறது தெரியுமா...?
அரிசி கழுவிய தண்ணீரில் பல்வேறு சத்துக்குள் அடங்கியுள்ளன. அரிசி கழுவிய தண்ணீரில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
அரிசி கழுவிய தண்ணீரை உடனடியாக பயன்படுத்துவதை விட மறுநாள் புளிக்க வைத்து பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.
தலை முதல் கால் வரை அனைத்து பாகங்களுக்கும் இந்த அரிசி கழுவிய தண்ணீர் பயன்படுகிறது. தலை முடிக்கு ஷாம்பூ பயன்படுத்திய பின் அரிசி தண்ணீர் கொண்டு அலசினால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.
அழகிற்காக மட்டுமல்லாமல் மூட்டு வலி, கை கால் வலி, வீக்கம் போன்றவற்றுக்கு அரிசி கழுவிய தண்ணீர் ஒரு சிறந்த வலி நிவாரணியாக பயன்படுகிறது.
சிறு குழந்தைகள் நடை பழகும் போது கால்கள் வலுப்பெற அரிசி கழுவிய தண்ணீரை சூடு செய்து வெதுவெதுப்பாக ஊற்றுவார்கள்.
அரிசியை ஊறவைத்து கழுவிய தண்ணீர், சோறு வடித்து எடுக்கப்பட்ட சூடான கஞ்சி என இரண்டுமே சருமம் மற்றும் முடி பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைக்கும், சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவோடும். அதற்கு தினமும் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும்போதும் அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்தி கழுவ வேண்டும்.