வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை இயற்கை முறையில் எளிமையாக போக்க...!!

தேன் சருமத்தை மென்மையாக்கும் தன்மை கொண்டது. ஆகவே சருமம் மென்மையாக விரும்பினால் 1 ஸ்பூன் தேனில், 2 ஸ்பூன் கல் உப்பு சேர்த்து கலந்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும்.

2 ஸ்பூன் உப்பு மற்றும் சர்க்கரையை கலந்து வைத்துவிட்டு முகத்தை நன்கு கழுவி கொள்ளுங்கள். பின்பு கலந்து வைத்திருகும் கலவையை கொண்டு முகத்தை  நன்கு மசாஜ் செய்து கால் மணி நேரம் கழித்து ஈரமான காட்டன் கொண்டு துடைத்து எடுத்து பின் மாஸ்சுரைசர் கொண்டு தடவவும். இப்படி செய்து வந்தால்  கரும்புள்ளிகள் அதிகமாவதை தடுக்கலாம்.
 
ஒரு ஸ்பூன் கல் உப்பை ரோஸ் வாட்டர் கலந்து முகத்தை மென்மையாக நன்கு மசாஜ் செது பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்தில் ஒரு நாள் செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் விலகும்.
 
ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் கடலை மாவு, 2 ஸ்பூன் பால் மற்றும் 1 மேசைக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி  பதினைந்து நிமிடம் காயவிட்டு பின் முகத்தை நன்கு தேய்த்து கழுவி வர கரும்புள்ளிகள் நீங்கும்.