புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

முகத்தில் உள்ள கருமையை நீக்கி பளிச்சிட செய்யும் அழகு குறிப்புக்கள் !!

கூந்தல் பராமரிப்பு முதல் சரும பராமரிப்பு வரை தேனை பயன்படுத்தலாம். முகத்தில் முகப்பரு, பருக்களால் பள்ளம், சிறு சிறு குருக்கள், உஷ்ணகட்டிகள், தேமல் அனைத்தையும் தேனை பயன்படுத்தி சரிசெய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

எலுமிச்சை தோலை நன்கு காயவைத்து பொடியாக்கி கொண்டால் ஏராளமான அழகு குறிப்புகள் செய்து நம் முகத்திற்கு பொலிவு பெற செய்யலாம். எலுமிச்சையில் இருக்கும் ப்ளீச்சிங் தன்மை சருமத்தை அழகாக்குகிறது.
 
எலுமிச்சை மற்றும் தேன் கலந்து பயன்படுத்துவதால் கிடைக்கும் சரும நன்மைகள் குறித்து இங்கு தெரிந்துகொள்வோம். எலுமிச்சை பவுடரை, தேன் மற்றும் தயிருடன் நன்றாகக் சேர்த்து முகத்தில் முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். இதனால் முகத்தில் உள்ள கருமை முழுவதும் நீங்கி முகம் பளிச்சிடும்.
 
எலுமிச்சை பவுடர், தேன், சந்தனம் மற்றும் கற்றாழை நான்கையும் நன்கு சேர்த்து கெட்டியாக பேஸ்ட் போல் கலந்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். இதனை வறண்ட சருமத்தினர் பயன்படுத்தினால் ஈரப்பதம் கிடைத்து சருமம் மென்மையாக மாறும்.

முகத்தில் கரும்புள்ளிகள், பருக்களால் வந்த பள்ளங்கள். தழும்புகள் போன்ற பிரச்சனைகளுக்கு தேன் தினசரி பயன்படுத்துவதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும்.

முகம், கழுத்துக்கு தேவையான அளவு தேன் எடுத்து இரண்டு டீஸ்பூன் எலுமிச்சைசாறு சேர்த்து நன்றாக கலக்குங்கள். பிறகு முகத்தில் மசாஜ் செய்து தடவுங்கள். தேன் முகத்துக்கு தேவையான ஈரப்பதத்தை தருவதோடு வறட்சியிலிருந்து காத்து, பருக்கள் வராமல் தடுக்கும்.