வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

வறண்ட சருமத்தினை சரிசெய்ய உதவும் அழகு குறிப்புகள் !!

தூங்குவதற்கும் முன் சருமத்தில் தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்வது. தேங்காய் எண்ணெய் அறை வெப்ப நிலையில் அடர்த்தியாகிவிடுவதால் இது மிகச்சிறந்த  மாய்ஸ்சரைசிங் கிரீமாக அமையும்.

பாலில் லாக்டிக் அமிலம் இருப்பதாலும் புண்களை எதிர்க்கும் தன்மை இருப்பதாலும் முகத்தில் பால் தடவிக்கொள்வது, உங்கள் சருமம் பாதிப்படைவதில் இருந்து  காக்கும்.
 
சூரிய ஒளி பாதிப்பு அல்லது சருமத்தில் வெடிப்பு இருந்தால் ஆலோவேரா ஜெல்லைப் பயன்படுத்தலாம். முகத்தை சூடான நீரில் அல்லாமல் வெதுவெதுப்பான நீரில்  கழுவிக்கொள்ளவும்.
 
நிறைய தண்ணீர் குடிக்கவும். நிறைய தண்ணீர் குடிப்பது அதிகமாக வியர்வை வெளியேற வைத்து சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கும். வாரத்திற்கு இரண்டு முறையேனும் மீன் சாப்பிடுவது உலர் சருமத்தை குணமாக்கும். மீனில் உள்ள ஒமேகா 3 பேட்டி ஆசிட் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக்கும்.
 
உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். இது சரும துளைகளை திறந்து நச்சுகளையும் மாசுகளையும் அகற்றும். தினமும் படுக்கச்செல்வதற்கு முன் இதை  செய்யவும்.
 
சின்னமோன் தூள் மற்றும் தேன் கலந்து உங்கள் முகத்தில் பூசிக்கொள்ளலாம். இதன் பிறகு 15 நிமிடங்கள் கழித்து கழுவிக்கொள்ளலாம். இதுவும் உலர் சருமத்தை எதிர்கொள்ள உதவும்.  
 
எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து முகத்தில் பூசிக்கொண்டு, 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவிக்கொள்ளவும். இதுவும் உலர் சருமத்தை குணமாக்குவதை  உணரலாம்.