Daily Horoscope
✕

சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் துளசி இலை !!

Written By Sasikala
Updated: புதன், 29 ஜூலை 2020 (17:45 IST)

* துளசியுடன் காய்ந்த ஆரஞ்ச் தோலை நன்கு அரைத்து கொண்டு, முகத்தில் முகப்பருக்கள் உள்ள இடத்தில தடவவும். இவ்வாறு செய்தால் முக பருக்கள்  விரைவில் குணமாகும்.
 
* 10 துளசி இலைகளை எடுத்து கொண்டு, அவற்றை அரைத்து அதனுடன் 2 டீஸ்பூன் முல்தானி மட்டி சேர்த்து கலக்கவும். அதனுடன் ரோஸ் நீரை இதில் சேர்த்து  முகத்தில் பூச வேண்டும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடுங்கள். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்தால், முகம் கலையுடன்  இருக்கும்.
 
* 15 துளசி இலையை நன்கு அரைத்து கொண்டு, அதனுடன் 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பவுடரை கலந்து கொள்ளவும். இவற்றுடன் ஆலிவ் எண்ணெய் 2 டீஸ்பூன்  கலந்து தலைக்கு தடவுங்கள். 2 மணி நேரத்திற்கு பிறகு தலையை லேசான சூடான நீரில் அலசினால், இளநரைகளை குணப்படுத்தலாம். மேலும் இந்த முறையை வாரத்திற்கு 1 முறை செய்யலாம்.
 
* 10 துளசி இலையை அரைத்து கொண்டு, அவற்றுடன் முட்டை வெள்ளை கருவை சேர்க்க வேண்டும். பிறகு இவை இரண்டையும் நன்றாக அடித்து கொண்டு,  முகத்தில் தடவவும். இது முகத்தில் உள்ள கிருமிகளை நீக்கி, பொலிவு பெற செய்யும். மேலும் தோலை இறுக செய்யும்.
 
* தூசுகள், அழுக்குகள் தலையில் சேர்வதால் அது பொடுகாக மாறி விடுகிறது. இதனை சரி செய்ய துளசி எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்து கொண்டு தலையின் அடி வேரில் தடவி தலைக்கு குளித்தால், பொடுகு பிரச்சினை குணமாகும்.

எல்லாம் காட்டு

டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?!.. பொதுமக்கள் அலார்ட்!..

நள்ளிரவு உணவால் வரும் ஆபத்து!.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

அடுத்த கட்டுரையில்
Show comments