புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

முடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரகம்; எப்படி தெரியுமா...?

இன்று பல பெண்கள் முடி உதிர்வு பிரச்சினையால் நாள்தோறூம் அவதிப்படுவதுண்டு. உரிய பராமரிப்பு இல்லாமல் அழுக்கு படர்ந்து, பிசுபிசுப்பு, பொடுகு போன்றவையும் முடி உதிர்வுக்கு முக்கிய காரணமாக அமைகின்றது.


உடலில் சத்துகள் குறைந்தாலும் முடிக்கு வேண்டிய ஊட்டச்சத்து கிடைக்காமல் அவை  வலுவிழந்து முடிஉதிர்தலுக்கு வழிவகுக்கும்.
 
இதற்காக கண்ட எண்ணெய்களை போடுவதனால் எந்த பயனும் இல்லை. அதற்கு இயற்கை முறை மூலம் தயாரிக்கப்படும் எண்ணெய் வகைகளை சிறந்தது. முக்கியமாக கருஞ்சீரகமும், வெந்தயமும் இதை கொண்டு எண்ணெய் தயாரித்து பயன்படுத்தினால் முடி உதிர்வு கட்டுக்குள் வரும்.
 
தேவையான பொருட்கள்: கருஞ்சீரகம் - 100 கிராம், வெந்தயம் - 100 கிராம், தேங்காயெண்ணெய் - 150 கிராம்.

செய்முறை: கருஞ்சீரகத்தையும் வெந்தயத்தையும் எடுத்து மிக்ஸியில் பொடியாக அரைக்கவும். தேங்காயெண்ணெயுடன் பொடிகளை நன்றாக கலந்து சிறிய பாத்திரத்தில் வைக்க வேண்டும். அடுப்பில் அகலமான பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதற்கு நடுவில் இந்த பாத்திரத்தை வைத்து சூடு செய்து சற்று  சூடேறியவுடன் இடுக்கி கொண்டு அதை வெளியே எடுத்து கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும்.
 
பிறகு தினமும் வெயிலில் வைக்கவும். 3 அல்லது 4 நாள் வைத்து எடுத்தால் எண்ணெயின் நிறம் மாறிவிடும். பிறகு இதை பயன்படுத்தலாம்.எண்ணெய் நன்றாக ஊறுவதால் இவற்றின் பலன் பன்மடங்கு கிடைக்கும். தினமும் தலைக்கு இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம்.
 
குறிப்பாக உள்ளங்கையில் தடவி தலையின் ஸ்கால்பகுதியில் விரல்களால் இலேசாக மசாஜ் கொடுத்து வந்தால் கூந்தல் மயிர்க்கால்களுக்கு ஊட்டம்  கிடைக்கும்.முடி உதிர்தல் பிரச்சனை படிப்படியாக குறையும். குறைந்தது இரண்டு மாதங்களாவது நீங்கள் பொறுமையோடு செய்தால் பலன் நிச்சயமாக கிடைக்கும். ஆனால் முடி உதிர்தல் பிரச்சனை நிரந்தரமாக நீங்கும்.